திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் நேற்று (ஆக. 10) ஒரே நாளில் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தின் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 689ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இருந்து இதுவரை, ஆயிரத்து116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கரோனா தொற்றால் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்து 529 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரத்து 130 பேர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்து வருகின்றனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 4008 இடங்களை கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் 531 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.