ETV Bharat / state

திருப்பத்தூரில் புதிதாக மேலும் 63 பேருக்கு கரோனா! - Corona Virus in Thirupaththur

திருப்பத்தூர்: இன்று புதியதாக மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

63-new-people-affected-by-corona-in-thirupaththur

author img

By

Published : Oct 12, 2020, 10:35 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கரோனா வைரசால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 226 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 25 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 1 ஆயிரத்து 865 பேர் பரிசோதனை முடிவிற்காகக் காத்திருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 266 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்சியர் கேட்கிறார்: அமேசான் பரிசுக் கூப்பன் - உலாவும் சைபர் கொள்ளையர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.