திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 23) புதியதாக 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 866 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, கரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த 52 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மாவட்டத்தில் 50 ஆயிரத்து 237 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 355 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். இதில், மூன்றாயிரத்து 532 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.