திருப்பத்தூர்: வானியம்பாடியை சேர்ந்த 48 வயது கூலித்தொழிலாளி, தனது வீட்டில் யாரும் இல்லா நேரத்தில், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 4 யது சிறுமியை அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமி வீட்டில் சோர்ந்த நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர்கள், அவரிடம் விராசித்த போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து, கூலித்தொழிலாளியை தாக்கியுள்ளனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கூலித்தொழிலாளியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 48 வயது கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்ற கொள்ளையன் போக்சோவில் கைது