திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூர் பகுதியில் கள்ளத்தனமாக எரிசாராயம் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல் துறையினர், கனவாய்புதூர் பகுதி கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 4725 லிட்டர் எரிசாராய கேன்களை கைப்பற்றினர்.
காவல் துறையினர் அங்கு வருவதை அறிந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், அந்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற 4 பேர் கைது!