ETV Bharat / state

ஒரு கோடி மதிப்புள்ள செம்மரம் கடத்திய 4 பேர் கைது

திருத்தணி பகுதியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்புள்ள செம்மர அடி வேர்களைப் பறிமுதல் செய்து இடைத்தரகர்கள் 4 பேரை, ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஒரு கோடி மதிப்பிலான செம்மரம் கடத்திய  4 பேர் கைது

author img

By

Published : Jun 1, 2022, 10:42 PM IST

திருவள்ளூர்: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ரவேலு வனத்துறையில் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் திருத்தணி அடுத்த தாழ்வேடு கிராமத்தில் அவரது விவசாய நிலத்தில் அரசு அனுமதியுடன் செம்மரம் பயிர் சாகுபடி செய்திருந்தார். நன்கு வளர்ந்த செம்மரங்களை அவரது மனைவி ராணி வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, வெட்டி விற்பனை செய்துள்ளார்.

அந்த மரத்தின் வேர்களை விவசாய நிலத்திலிருந்து பிடுங்கி அங்குள்ள குடோனில் வைத்திருந்தனர். இருப்பினும் அவற்றை விற்பனைக்கு உரிய அனுமதி பெறாத நிலையில், விற்பனை செய்து தருவதாகக் கூறி அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற இடைத்தரகர் ஆந்திர மாநிலம், புத்தூர் பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி, துரைவேல், சீனு ஆகியோர் மூலம் செம்மர வேர்கள் விற்பனை தொடர்பாக செம்மரம் கடத்தல் ஏஜென்டு உடன் பேசியுள்ளனர்.

அதன்படி நேற்று இரவு தாழ்வேடு விவசாய நிலத்திற்கு அருகில் வைத்திருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது, சுற்றிவளைத்த திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வேனுடன் செம்மரம் வேர்களை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து செம்மரக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து 4 பேரையும் சுற்றி வளைத்து, கைது செய்ததாக திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி அலுவலர் பேசுவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.3.24 லட்சம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.