ETV Bharat / state

சாலையோர வியாபாரிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்! - 3 People injured in wall accident

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்து 13 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம் ஏற்பட்டுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 People injured in wall accident in Tirupaththur

author img

By

Published : Oct 14, 2020, 7:39 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தினை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த சங்கர்(50), அர்ஜூன்(24), அர்ஜுன் மகன் நிதீஷ்(13) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்,

சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுவர் இடிந்து விழுந்து விபத்து

பின்னர் வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் ஜேசிபி ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி என்பவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்

சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தவர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிக் பாஸ் வந்த வேடந்தாங்கல் நான்தானேடா.... ஷிவானி க்ளிக்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.