ETV Bharat / state

கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சத்தை திருடிய பலே கில்லாடிகள் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி பதிவு! - thirupathur crime

மாதனூர் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் இருச்சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த, 3 லட்ச ரூபாயை அவரை பின்தொடர்ந்து சென்று அருகில் இருந்தபடியே கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் இரு திருட்டு கில்லாடிகளின் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகியுள்ளது.

3 lakhs theft cctv footage in tiruppathur

author img

By

Published : Dec 3, 2020, 5:18 PM IST

திருப்பத்தூர்: கண்ணிமைக்கும் நேரத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரை பின் தொடர்ந்து, அவர் வாகனத்தில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் குறித்த கண்காணிப்புப் படக்கருவி பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா தோளப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ஞானசேகரன் (75). இவர் தனது மனைவியுடன் 3 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு வங்கியிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பாலூர் அருகில் சாலையோரமாக வண்டியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி வாங்குவதற்காக, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் தக்காளி வாங்கியுள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு

அவ்வேளையில், இவர்களைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், அருகில் நின்றவாறு கண்ணிமைக்கும் நேரத்தில் வாகன பெட்டியில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு, தப்பித்துச் செல்லும் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.