ETV Bharat / state

வாணியம்பாடி அருகே குளத்தில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 30, 2022, 7:56 AM IST

வாணியம்பாடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வாணியம்பாடி அருகே குட்டையில் நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுண்ணாம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை விமான போக்குவரத்து மேலாண்மை இறுதியாண்டு படித்து வந்தார். இவரது நண்பரான ராகுல் (21), இவர் இளங்கலை வணிகவியல் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி வந்தார். இருவரும் தீபாவளி விடுமுறைக்காக தனுஷின் சொந்த ஊரான ஆலங்காயம் அருகே உள்ள சுண்ணாம்புபள்ளம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்தில், நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராகுல் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் இருவரும் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் குளத்தின் அருகே வந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களது உடைகளை கண்டு சந்தேகமடைந்து, ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர், நீண்ட நேரம் போராடி இருவரது உடலமையும் மீட்டனர். அதன்பின் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தீபாவளி விடுமுறைக்காக கிராமத்திற்கு வந்த நண்பர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிசிடிவி: தேனியில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.