ETV Bharat / state

கடற்கரையில் காதலனுடன் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலனை அடித்து விரட்டி கும்பல் கொடூரம்.. நடந்தது என்ன? - rape

young girl sexual abuse in Tuticorin beach: தூத்துக்குடி கடற்கரையில் காதலனுடன் தனிமையில் இருந்த 22 வயது இளம்பெண்ணை மிரட்டி தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young gilr sexual abuse in Tuticorin beach
கடற்கரையில் இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:00 AM IST

Updated : Sep 8, 2023, 12:26 PM IST

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலனும் நேற்று (செப். 8) இரவு 10 மணி அளவில், தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், காதலனை அடித்து விரட்டி விட்டு, அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை (sexual harassment) செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இளைஞர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணை மீட்ட போலீசார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கடற்கரை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் 2 பேரும் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தது தூத்துக்குடி திம்மையார்காலனி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஒருவரை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரது நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை, காதலனை அடித்து துரத்தி விட்டு இருவர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Chennai Crime News: கூவத்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு..செல்போன் திருடனை துரத்தி பிடித்த காவலர்..

Last Updated : Sep 8, 2023, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.