ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களின் கவனத்துக்கு...! - வாக்காளர் அடையாள அட்டை

தூத்துக்குடி: வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காத வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடையாள அட்டை கொண்டு தேர்தலில் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்
author img

By

Published : Apr 12, 2019, 1:59 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்பொழுது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை உள்ளீடு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. அடுத்தாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,595 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், மூன்று வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 700 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வமாக வந்து தேர்தல் பணியில் ஈடுபடலாம். ஜனவரி மாதத்திற்கு பிறகு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணியின் மூலமாக 26 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காத வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டையைக் கொண்டு தேர்தலில் வாக்களிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 நாட்களாக சமரச தீர்வு மையத்தின் மூலம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடைசி நாளான இன்று தீர்வு மையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்வு மையத்தின் மூலமாக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளையும் விரைவாக முடிக்கலாம். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் வருகிற 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தற்பொழுது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை உள்ளீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து இரண்டாவது கட்டமாக வாகாகுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்படத்துடன் கூடிய வாகாகாளர் பட்டியலை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 1,595 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வி.வி.பேட் எந்திரம், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 3 வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும்.

மாவட்டத்தில் மொத்தம் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 3 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 700 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளது. அவற்றை தற்போது வாக்காளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காத வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 12 செல்லத்தக்க ஆவணங்களை அடையாள அட்டையாக கொண்டு தேர்தலில் வாக்கு செலுத்தலாம். தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட செல்லத்தக்க அடையாள அட்டையாக ஆதார் அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டை, அரசாங்க அடையாள அட்டை உள்பட 12 ஆவணங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த தேர்தலில் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வமாக வந்து தேர்தல் பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கு பிறகு நடைபெற்ற  2வது கட்ட வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணியின் மூலமாக 26 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யவும், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக காவல்துறையுடன் கலந்தாலோசித்த பிறகே அனுமதி வழங்கப்படும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.