இதுகுறித்து துறைமுக பொறுப்புக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம் 9-ல் எம்.வி. "இன்ஸ் கஸ்டமோனு" என்ற கப்பலிருந்து ஒரே நாளில் 27,546 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேடை (பாறை தாது) கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முந்தைய சாதனையான எம்.வி.ஆனோமஸ் என்ற கப்பலிருந்து 08.09.2012 அன்று கையாளப்பட்ட அளவான 26,527 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் அளவை விட அதிகமாகும். இந்த கப்பலானது ஏகாப் துறைமுகத்திலிருந்து 55,450 டன் ராக் பாஸ்பேட்டை ஏற்றி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்த கப்பலின் சரக்கினை துறைமுகத்தின் நகரும் பளுத்தூக்கி மற்றும் ஹாப்பர் மூலம் ஒரே நாளில் 27,546 டன் ராக் பாஸ்பேட் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது. உர தயாரிப்பிற்கு மூலப்பொருளான ராக் பாஸ்பேட்டை தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்துள்ளது. துறைமுகத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தேவையான சிறந்த வசதிகள் மற்றும் தரமான சேவை வழங்கும் என்று உறுதியளிக்கிறது.
இச்சாதனைக்கு அதிநவீன இயந்திரமயமாக்கல் மட்டுமல்லாமல் மிகவும் ஈடுபாடுடன் உழைத்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுவதாக அதில் தெரிவித்திருந்தது.