தூத்துக்குடி: கன்னங்கட்டை ஊராட்சிக்குட்பட்ட V.தளவாய்புரம் என்ற கிராமத்தில் விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள சுமார் 250-க்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் நகர்ப்புறங்களில் இருந்து விளைநிலங்களின் வழியாக இக்கிராமத்திற்கு வரும் இரண்டு மாத காலமாக பழுதடைந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்து, பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன.
தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையினால், ஏதேனும் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து இக்கிராம மக்கள் பலமுறை பஞ்சாயத்து தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும், மின்சார வாரிய அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பழுதடைந்த இத்தகைய மின்கம்பங்கள் மனிதர்களையோ (அ) கால்நடைகளையோ உயிர்ச் சேதத்திற்கு ஆளாக்கிவிடும் அபாயம் உள்ளதாக கிராமத்தினர் அச்சம்தெரிவித்துள்ளனர். அத்தகைய அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் முன், பழுதடைந்த மின் கம்பங்களை மின்சார வாரியம் உடனடியாக அப்புறப்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
மேலும், கரோனா நேரத்தில் V. தளவாய்புரம் கிராம மக்கள், 2 தடுப்பூசிகளை செலுத்தி மாவட்ட நிர்வாகத்திடமும், மத்திய அரசிடமும் பாராட்டைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரியாணி சண்டை: மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை கட்டிப்பிடித்த மனைவி!