ETV Bharat / state

சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளம் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் - தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்

சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளம் அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளம் அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்

author img

By

Published : Jun 28, 2021, 9:27 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ரூபம் வேலவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக சசிகலா தொடர வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக சில மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள், கிளை கழக நகர கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒப்புதல் பெறாமல் அவர்களது விருப்பத்திற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளம் அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்

சசிகலா கழகம் ஒற்றுமையுடனும் வலிமையுடன் செயல்படும் நோக்கத்தோடு தொலைபேசி வாயிலாக உரையாடிய கழக உறுப்பினர்களை சர்வாதிகாரத் தன்மையோடு நீக்கியதை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, மாவட்டம் தோறும் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ராமசாமி பாண்டியன், அம்மா பேரவை நகர செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜெயசீலன், நகரப் பொருளாளர் சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக, அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ரூபம் வேலன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' - திண்டுக்கல் சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.