தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் உள்பட பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்கள், விவசாய சங்கங்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்துள்ளனர்.
தகவலின்பேரில், நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஜெயஸ்ரீ, காவல் துறையினர் விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு திடீரென வருகைதந்தனர்.
சார்பதிவாளர் அலுவலக கதவுகள் உடனடியாக மூடப்பட்டது. சார் பதிவாளர் ரவிச்சந்திரன், அலுவலக ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள், அலுவலகத்தில் இருந்த சந்தேகப்படும்படியான நபர்கள் ஆகியோரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடத்தினர்.
சார் பதிவாளர் உணவு கொண்டுவரும் பையிலிருந்து மூன்று லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் சார் பதிவாளர் மேசையிலிருந்து ஒன்பதாயிரத்து 160 ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.