தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்திற்கு வருகை தந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் பாரதியார் பிறந்த இல்லத்திற்குச்சென்று மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதி வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் மற்றும் அவரது புத்தகங்கள், கையெழுத்துகள் ஆகியற்றை பார்வையிட்டு அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக்கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டில் தேசியக்கொடி ஏந்தி மரியாதை செலுத்த வேண்டும் என்று பாரதப் பிரதமர் வலியுறுத்தியதை அடுத்து, எட்டயபுரம் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, பேரணியாக சென்றார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இப்பேரணி பாரதியார் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. பின்னர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் கட்சிப்பிரமுகர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதன்முறையாக மக்கள் வாழ்விட பகுதியில் தங்கம் - சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு