ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் தோல்வியடைவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

author img

By

Published : Sep 19, 2019, 12:03 AM IST

தூத்துக்குடி: மு.க. ஸ்டாலின் போல் ஆயிரம்விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தோல்வியைத்தான் எதிர்கொள்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Minister Kadambur Raju

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வடகிழக்குப் பருவமழைக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், இம்மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் ஆகியவை குறித்து துறை ரீதியாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் புகழ் பெற்ற தசரா, கந்தசஷ்டி திருவிழாவிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் மூலமாக மாவட்டத்தில் நூறு சதவீதம் வளர்ச்சி பணிகள் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்து இயக்கவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக புறநகர் பேருந்து நிலையம் அமைத்து பக்தர்களுக்குப் போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக திமுக அறிவித்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தது எதிர்பார்த்ததுதான். தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பின்னர் முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து விரிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஸ்டாலின் சொன்னதுபோல் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டியது தான் பாக்கி. ஸ்டாலின் சொன்னதுபோல் எதையும் செய்வது கிடையாது. கொள்கையிலிருந்து பின்வாங்குவது தான் திமுகவினரின் வழக்கம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் ஒதுக்கீட்டை திமுக பாராளுமன்ற எம்.பி.கள் வேண்டாமென யாரும் சொல்லவில்லை. மாறாக அவர்களே மாணவர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு கடிதத்தை அளித்து வருகின்றனர். ஆகவே திமுகவினரே மறைமுகமாக இந்தியை ஊக்குவித்து வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் தனது முதல் தேர்தலில் ஆயிரம்விளக்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தொகுதியில் 1980ஆம் ஆண்டு ஸ்டாலின் முதல் முறையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஸ்டாலின் வழியில் அவரைப் போலவே அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆயிரம்விளக்கு தொகுதியில் தோல்வியை தான் எதிர் கொள்வார். அதற்கு எங்களது வாழ்த்துகள் என்றார்

போக்குவரத்து துறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து முதலமைச்சர், போக்குவரத்து துறை, அமைச்சர் வருவாய் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

Intro:மு.க.ஸ்டாலின் போல் ஆயிரம்விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தோல்வியைதான் எதிர்கொள்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டிBody:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

வடகிழக்கு பருவமழைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் ஆகியவை குறித்து துறை ரீதியாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ் பெற்ற தசரா மற்றும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வளர்ச்சி பணிகள் நடைபெறும்.
பக்தர்களின் வசதிக்காக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்காக கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்கத்து மாவட்டங்களான திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்து இயக்கவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக புறநகர் பேருந்து நிலையம் அமைத்து பக்தர்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி குறித்து அமித்ஷா கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து. பிளஸ் 2 தேர்வு முறையில் மதிப்பெண்முறையை மாற்றி, கிரேடு முறையை கொண்டு வந்தது தமிழக பள்ளிக்கல்வித்துறை தான். இதனால் பிளஸ்-2 தேர்வு முடிவில் குறைந்த மதிப்பினால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை கிரேடு சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் தெளிவான விளக்கங்களை விரைவில் அறிவிப்பார்.

இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக திமுக அறிவித்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தது எதிர்பார்த்ததுதான். தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பின்னர் முதலீடுகள் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து விரிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது ஸ்டாலின் சொன்னதுபோல் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டியது தான் பாக்கி. மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல் எதையும் செய்வது கிடையாது. கொள்கையிலிருந்து பின்வாங்குவது தான் திமுகவினரின் வழக்கம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் ஒதுக்கீட்டை திமுக பாராளுமன்ற எம்பிகள் வேண்டாமென யாரும் சொல்லவில்லை. மாறாக அவர்களே மாணவர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு கடிதத்தை அளித்து வருகின்றனர். ஆகவே திமுகவினரே மறைமுகமாக இந்தியை ஊக்குவித்து வருகிறார்கள். போக்குவரத்து துறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தமிழக முதலமைச்சர், போக்குவரத்து துறை, அமைச்சர் வருவாய் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு என்றைக்கும் தனித்தன்மையுடன் விளங்கும். மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு செய்யாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிஸ்டாலின் தனது முதல் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தொகுதி நல்ல தொகுதி. 1980ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஸ்டாலின் வழியில் அவரைப் போலவே அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆயிரம்விளக்கு தொகுதியில் தோல்வியை தான் எதிர் கொள்வார். அதற்கு எங்களது வாழ்த்துக்கள் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.