தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பேரிலோவன்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (37), சிறுவன் சென்றாய பெருமாள் (16) ஆகிய இருவரும் வைப்பாறு ஆற்றுப்படுகையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கிருந்த மணல் குவாரி பள்ளத்தில் இருவரும் ஆடுகளை குளிப்பாட்டியபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சென்றாய பெருமாள் நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது, சிறுவனைக் காப்பாற்ற சென்ற ராமராஜும் நீரில் மூழ்கினார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!