ETV Bharat / state

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை - 6 ம் வகுப்பு மாணவன் இஸ்வின் ஜோசுவா

பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவன் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றுள்ளான்.

Etv Bharatபஞ்சாபில் தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

author img

By

Published : Nov 4, 2022, 12:29 PM IST

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் இஸ்வின் ஜோசுவா, இவர் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் தந்தை ரூபன் கிஷோர் குழந்தை நல குழு தலைவராகவும், தாய் கவிதா ரேச்சல் ‌தனியார் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வருகின்றனர். 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் இஸ்வின் ஜோசுவா மாவட்டத்தில் நடக்க கூடிய செஸ்(சதுரங்க ஆட்டம்) போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோப்பையை வென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 28 முதல் 30ந்தேதி வரை CISCE பள்ளி மாணவர்களுக்கிடையே தேசிய அளவிலான சதுரங்க போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தில் ‌இருந்து‌ மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு சார்பாக விளையாடிய 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணியில் தூத்துக்குடியை சேர்ந்த இஸ்வின் ஜோசுவா‌ எட்டு சுற்றுகளில் 4 வெற்றிகள் வீதம் 3 டிரா 1 தோல்வி என 5.5 புள்ளிகள் பெற்று அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

பஞ்சாபில் தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

இதுகுறித்து மாணவன் ஜோசுவா கூறுகையில், சதுரங்க போட்டி விளையாட்டு பயிற்சியில் 1 ம் வகுப்பு முதல் ஆர்வம் மிகுதியாக இருந்தது. எனது வருங்கால கனவு, கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே, அதற்கு தொடர்ந்து பயிற்சி செய்வதாக கூறினார். மேலும் பயிற்சியாளர் ராஜசேகருக்கு வெற்றியை சமர்பிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.