தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பாலம் அருகில் சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லி கற்களால், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் சின்னத்துரை என்பவர், சாலையில் கிடந்த ஜல்லி கற்களைத் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். காவலர் தானாகவே களத்தில் இறங்கி சாலை சத்தம் செய்யும் காணொலி, சமூக வலைதளத்தில் வைரலானது. வீடியோவை பகிரும் பலரும், காவலரைப் பாராட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவலருக்கு பாராட்டு தெரிவித்தார்.