தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலையும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஒன்பதாவது நாள் (ஜூலை 4) திருவிழாவை முன்னிட்டு பணிமய மாதா அன்னை சப்பர பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமயமாதா அன்னை பவனியாக வந்தார். பவனி பேராலய வளாகத்தை சுற்றி வந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில், சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கரூர் அருகே விநோத மரபு: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!