ETV Bharat / state

மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் போராட்டம்! நாடு திரும்ப மறுத்து ஆர்ப்பாட்டம்! என்ன காரணம்? - தூத்துக்குடி மீனவர்கள்

Fishermen held captive in Maldives : மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை அந்நாட்டு அரசு விடுவித்தும், மீனவர்கள் இந்தியா வர மறுப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

fishermen held captive in Maldives
மாலத்தீவில் தூத்துக்குடி மீனவர்களை சிறைபிடித்த சம்பவம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 11:28 AM IST

மாலத்தீவில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம்

தூத்துக்குடி: தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர் (வயது 22), அதிசய பரலோக திரவியம் (வயது 25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன் (வயது 23), ஆதிநாராயணன் (வயது 20), மகேஷ்குமார் (வயது 24), சிலுவைபட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மிக்கேல் (வயது 48), விக்னேஷ் (வயது 31), மணி மற்றும் சக்தி ஆகிய 12 பேரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இந்தியா - மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு இதேபோல் தூத்துக்குடி மீனவர்கள் பிடிபட்டனர். ஆனால் அப்போதுள்ள மாலத்தீவு அரசு அவர்களை உடனடியாக விடுவித்தது. ஆனால் இப்போது மாலத்தீவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக கூறி மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது என்று மீனவர்கள் கூறி வந்தனர்.

இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி நிறுவனம் உடனடியாக மாலத்தீவு அரசு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்தியா - மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு முன்வந்துள்ளது. மேலும் மீனவர்கள் 12 பேரையும் அந்நாட்டு அரசின் செலவிலேயே இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்யபட்டன.

ஆனால், மீனவர்கள் வந்த படகை இந்தியா கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் மாலத்தீவு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்து, நாங்கள் ஊருக்கு (இந்தியா) சென்றால் படகுடன் தான் செல்வோம், இல்லையெனில் செல்லமாட்டோம் என்று கூறி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தோனிகள் (படகு) சங்க தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் மாலத்தீவில் உள்ள மீனவர்களிடம் கலந்து பேசி அவர்களுடன் எடுத்த புகைப்படமும் தற்போது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: "கூட்டணி வரும், கவலைப்பட தேவையில்லை" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூசக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.