ETV Bharat / state

மஞ்சள் குலை விவசாயிகளுக்கு தித்திப்பு தருமா பொங்கல் பண்டிகை? - turmerric pongal sales yield

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்கிய போதும் மஞ்சள் குலை விற்பனை மந்தமாக இருப்பதால், தூத்துக்குடி அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மஞ்சள் குலை
மஞ்சள் குலை
author img

By

Published : Jan 12, 2021, 8:54 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் குலை. பொங்கலுக்கான பொருள்கள் வாங்கும் போது, மங்களகரமாக முதலில் வாங்குவது மஞ்சள் குலைதான். வீட்டில் பொங்கல் வைக்கும் போதும், பொங்கல் பொங்கி முடிந்ததும் அடுப்பிலிருந்து பானையை இறக்குவதற்கு முன்பும் மஞ்சள் குலையை சுற்றி சூரியனை வணங்குவது வழக்கம்.

குறிப்பாக, மஞ்சள் கிருமிநாசினி பொருள் என்பதால், பொங்கல் முடிந்த பின்னும் மஞ்சள் குலைகளை வீட்டின் ஒரு பகுதியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். இதனால், வீட்டில் ரம்மியமாக மஞ்சள் மணப்பதுடன் பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ வீட்டுக்குள் வராது என்பது நம்பிக்கை.

மஞ்சள் குலை
மஞ்சள் குலை

இத்தனை அம்சங்கள் நிறைந்த மஞ்சள் குலைகள், தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே உள்ளே சாயர்பரம், சக்கமாள்புரம், சிவஞானபுரம், சேர்வைக்காரன் மடம், சிவத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. ஆறு மாத கால பயிரான இவை, பொங்கலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக உள்ளூர், வெளியூர் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார கிராமங்களில் மஞ்சள் குலை சாகுபடி நடைபெறுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆடி மாதம் விதைக்கப்பட்டு மார்கழி மாதத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் குலை, செம்மண் பூமியில் மட்டுமே வளரும். மஞ்சள் குலை சாகுபடிக்கென ஈரோட்டு சந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதைப்பயிர்களை வாங்கிவந்து தூத்துக்குடி விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

மஞ்சள் குலை

இந்த மஞ்சள் குலை சாகுபடியை நம்பி 10 ஆயிரம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். நன்கு பருவமடைந்த மஞ்சள் குலைகளை அறுவடை செய்து சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தூத்துக்குடியிலிருந்து அறுவடை செய்யப்படும் மஞ்சள் குலைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற வடமாநிலங்களுக்கும், சென்னை, கோயம்புத்தூர் போன்ற வெளிமாவட்டங்களிலும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் குலைகளுக்கு நல்ல விலை இருந்ததால் திருப்தியடைந்த விவசாயிகள், இந்த ஆண்டு மந்தமான சீசன் காரணமாக கலக்கமடைந்துள்ளனர். தற்போது பெரிய மஞ்சள் குலை ஒன்று 25 ரூபாய், சிறிய மஞ்சள் குலை 15 முதல் 20 ரூபாய் என கடந்த ஆண்டை விட குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மஞ்சள் குலை
மஞ்சள் குலை

பொங்கலுக்கு தேவையான பொருள்கள் டன் கணக்கில் வியாபாரத்துக்காக சந்தைக்கு வரும் நிலையில், மஞ்சள் குலையின் விற்பனை மந்த நிலையில் இருப்பது விவசாயிகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகவும் மஞ்சள் குலையின் விலை மேலும் சரியும் என்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கயிறை கட்டி மலையை இழுக்கும் முயற்சியாக இடைவிடாது பெய்யும் மழைக்கு மத்தியிலும் மஞ்சள் குலையை விற்று லாபம் பார்க்க நினைக்கும் விவசாயிகளுக்கு இந்த பொங்கல் தித்திப்பு தருமா? இல்லை திரிந்த பால் போலாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.