தூத்துக்குடி: பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் முன்பாக திருநங்கைகள் நின்றுகொண்டு வலுக்கட்டாயமாக பொதுமக்களிடம் பணத்தை பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது.
இது குறித்து யாரும் புகார் அளிக்காததால் அவர்களை காவல்துறையினர் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில், இளைஞரை வழிமறித்த திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து தாக்குவதும் அவரிடமிருந்து செல்போனை பறிப்பதுமான சிசிடிவி காட்சி வெளியானது.
அந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். துறைமுக நகரமான தூத்துக்குடி புறவழிச் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரி ஓட்டுநர்களை திருநங்கைகள் குறி வைக்கின்றனர். இதேபோல் திருமண வீடுகளுக்கு அவர்கள் சென்று பணம் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.
இதை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநங்கைகள் ரவுடிகளாக மாறி வழிப்பறியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆசிரியரை அடித்த மாணவன் மீது வழக்கு - விழுப்புரத்தில் நடந்தது என்ன?