ETV Bharat / state

அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடி கைது - பிரபல ரவுடி

தூத்துக்குடி: அனுமதி இல்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்திவந்த பிரபல ரவுடி மாணிக்கராஜ் என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடி-கைது
author img

By

Published : Jul 22, 2019, 11:01 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தொழிற்சாலை இயங்கிவருவதாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அரிகண்ணன், இசக்கிராஜா இது குறித்து விசாரிக்கையில் கோவில்பட்டியிலிருந்து பருவக்குடி செல்லும் சாலை வழியாக ஆட்டோவில் பட்டாசுகள் கைமாற்றப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் பருவக்குடி செல்லும் சாலையில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அந்த ஆட்டோவை நிறுத்தி அதனை சோதனையிட்டபோது அதில், மூன்று ராக்கெட் பட்டாசு பெட்டிகள், 100 சீனி வெடி தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலி வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜாதான் தன்னை இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அவர் மேலும், புளியங்குளம் கிராமத்தின் அருகே ஒதுக்குப்புறமாக உள்ள காலி இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் தொழிற்சாலை நடத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படும் குளோரேட், கரி மருந்து, நான்கு சீனி வெடி பெட்டிகள், 25 கருந்திரி திரிதட்டு உள்ளிட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடி

இது தொடர்பாக மாணிக்க ராஜாவை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் மாணிக்கராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:கோவில்பட்டி அருகே அனுமதியில்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடி கைது
Body:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியில் அனுமதி இல்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்த பிரபல ரவுடி மாணிக்கராஜ் என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் மற்றும் லோடு ஆட்டோ ஆகியவற்றை  பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மாணிக்கராஜ் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் அரிகண்ணன், இசக்கிராஜா மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பட்டியிலிருந்து பருவக்குடி செல்லும் சாலையில் உள்ள புளியங்குளம் கிழக்குப் பகுதியில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், 3 ராக்கெட் பட்டாசு பெட்டிகள், 100 சீனி வெடி தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலி வளையங்கள், மருந்து செலுத்தப்பட்ட 100 வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமை ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாணிக்கராஜா என்பது தெரியவந்தது. மேலும், புளியங்குளம் கிராமத்தின் அருகே மறைவான பகுதியில் உள்ள காலி இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

போலீஸார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு பட்டாசு தயாரிக்க பயன்படும் குளோரேட் அரை மூடை, சாம்பல் ஒரு மூட்டை, கரி மருந்து ஒன்னேமுக்கால் மூடை, உப்பு ஒரு மூட்டை, 4 சீனி வெடி பெட்டிகள், 25 கருந்திரி திரிதட்டு உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாணிக்க ராஜாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கராஜா மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர், கழுகுமலை, எட்டயபுரம், விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம், ஏழாயிரம்பண்ணை காவல் நிலையங்களில் கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.