ETV Bharat / state

“20 லட்சம் ரூபாய் செலவில் குளோரின் மாத்திரை… தூத்துக்குடியில் நோய் தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! - thoothukudi medical camp

Thoothukudi medical camp: தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை அளிக்கக் கூடிய பிரிவில் மட்டும் 6 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் சேதமாகியுள்ளன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 5:11 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு!

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர், தூத்துக்குடி எம்பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், “இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 32 ஆயிரத்து 430 பேர் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றிற்காகச் சிகிச்சை பெற்றுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 110 மருத்துவக் குழுக்கள் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

தேவைப்படக்கூடிய இடங்களுக்குச் சென்று மருத்துவ குழுவினர் மருத்துவ உதவிகளைச் செய்து கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 30 இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 36 இடங்களிலும் தென்காசியில் 30 என மொத்தம் 26 மருத்துவ குழுவினர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 916 மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 58 ஆயிரம் பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள். இன்று மதுரை அப்பல்லோ, வேலம்மாள், வடமலையான், மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 50 தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி சிறப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 140 துணை சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.பல சுகாதார நிலையங்களில் சுற்றுச்சூழல் உடைந்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கணக்கெடுத்து உடனடியாக சரி செய்யத் தேவையான நிதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தருவதாகக் கூறியுள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டதால் அங்குள்ள மருத்துவக் குழுக்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள்” என்றார்.

இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை அளிக்கக் கூடிய பிரிவில் மட்டும் 6 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய பணி நடைபெற்று வருகிறது.

அங்குத் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் முற்றிலுமாக அகற்றப்படும். மேலும், தண்ணீரிலிருந்து தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக குளோரின் மாத்திரை வழங்கப்படும். இருபது லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் இதற்காக குளோரின் மாத்திரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனைப் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் குடங்களில் உள்ள குடிநீரில் போட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அந்த நீரைப் பருக வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: திமுகவை 'இந்தியா' கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதே நிதிஷ்குமார் நோக்கம் - பாஜக தலைவர் அண்ணாமலை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.