தூத்துக்குடி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.1.5 கோடி செலவில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா-வுக்கு நினைவரங்கம், நூலகம் மற்றும் அவரது சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணிகளை எம்பி கனிமொழி பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் பெ.கீதாஜீவன் உடன் இருந்தார். அதன்பின் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டியை பதிப்பகங்கள் தான் தருவது வழக்கம்.
மற்ற மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்கி வருகிறது. சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகள் வாங்கிய எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
எழுத்தாளர்களுக்கும் தமிழுக்கும் பல்வேறு திட்டங்களை தினமும் அரசு அறிவித்து கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸுக்கு பலமாக இருக்கும். அதற்காகத்தான் அவர் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...