ETV Bharat / state

"மீனவ இளைஞர்களை கடலோர காவல் படையில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை" - ஆளுநர் ஆர்.என்.ரவி - INDIAN Coast Guard

Governor RN Ravi: மீனவ இளைஞர்களை கடலோர காவல் படையில் சேர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Governor RN Ravi
மீனவ இளைஞர்களைக் கடலோர காவல் படையில் சேர்க மத்திய அரசு நடவடிக்கை - ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 1:13 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தூத்துக்குடி: உலக மீனவர் தின வெள்ளி விழா நேற்று (நவ.21) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பாக உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மீனவர்கள் தேச வளர்ச்சிக்கு முழு பங்களிப்புடன் இருக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து மீன்பிடிக்கச் சென்று, மீன்களைப் பிடித்து வந்து ஊட்டச்சத்தான உணவைக் கொடுக்கிறார்கள். உலகம் முழுவதும் நிலத்தில் இருந்து கிடைக்கும் உணவுகள் மூலம் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது. கடல் மீன்களிடம்தான் ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கிறது. அதற்காகத்தான் ஐநா சபை உலக மீனவர் தினத்தைக் கொண்டாடி வருகிறது.

மேலும், மீனவர்கள் நாட்டின் முதல் பாதுகாவலர்கள், நமது தேசம் மிகப்பெரிய கடல் எல்லை கொண்டதாக உள்ளது. நாட்டின் மற்ற பகுதியில் ஏராளமான பாதுகாப்புப் படைகள் உள்ளது. ஆனால், கடலில் பாதுகாப்பு மீனவர்களை நம்பிதான் உள்ளது. கடலோர காவல் படையில் மீனவர்கள் பங்கு பெற வேண்டும். ஏனெனில், கடலை பாதுகாப்பது என்பது அனைவராலும் முடியாது.

ஆகவே, கூடிய விரைவில் மத்திய அரசால் மீனவ இளைஞர்கள் கடலோர காவல் படையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடல் குறித்து மீனவர்கள் தவிர யாருக்கும் முழுமையாகத் தெரியாது. மீனவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் தற்போது உள்ளது.

இந்திய தேசம் மிகப்பெரிய கடல் பரப்பு உடையது. ஆகவே, நாம் கடல் வளத்தைக் காக்க வேண்டும். மீனவ சமுதாயம் நாட்டின் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுக்கிறது. மேலும், நமது தேசம் வளர்ந்து கொண்டு வருகிறது. அதில் மீனவ பங்களிப்பும் இருக்கப்பட வேண்டும். பிரதமர், மீனவர்களுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் நான் பேசும்போது, மீனவ மக்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவதாக என்னிடம் கூறியுள்ளார்.

மத்திய அரசால் மீனவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படும். மீனவ மக்கள் என் இதயம் முழுவதும் நிறைந்து உள்ளார்கள். ஆகவே, உங்கள் குறைகளைக் கூற ஆளுநர் மாளிகை கதவு எப்போதும் திறந்து இருக்கும். மீனவ சமுதாயம் அனைத்திலும் இளைஞர்கள், பெண்கள் திறமை வாய்ந்தவர்கள். ஆகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரம்; வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.