ETV Bharat / state

’கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம்...’ - திமுக ஆட்சி குறித்து அண்ணாமலை!

திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது இனிப்பு, கசப்பு, காரம் கலந்தது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

annamalai
அண்ணாமலை
author img

By

Published : Aug 20, 2021, 10:40 AM IST

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று (ஆக.20) விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வந்தனர்.

அவர்களுக்கு, தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில், பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு

அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்பது மரபு. இருப்பினும் திமுக ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது.

திமுகவை விமர்சித்த அண்ணாமலை

இனிப்பு என்னவென்றால், ஒன்றிய அரசுடன் இணைந்து கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்னவென்றால் ஒன்றிய அரசு என ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசியது. காரம் என்னவென்றால் அனேக இடங்களில் பாஜக தொண்டர்களைக் குறிவைத்து கைது செய்கின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக மீண்டும் கையிலெடுப்பது போல தோன்றுகிறது. இதுபோலவே, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனைகள் செய்து வருகின்றனர்.

எனவே, இவற்றையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டுவிட்டு, கரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.