ETV Bharat / state

திருச்செந்தூர் முருகனுக்கு மொய் செலுத்திய பக்தர்கள் - திருக்கல்யாணத்தில் ருசிகரம்! - திருக்கல்யாணம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

murugan
author img

By

Published : Nov 4, 2019, 5:07 PM IST

உலகப் புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இன்று குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, இன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் தவசுக்குப் புறப்பட்டு, தெப்பக் குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, தவசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து தெற்கு ரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சுவாமியும் அம்பாளும் திருக்கோயில் வந்து சேர்ந்தனர். கிழக்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபவமும் கும்பம் வைத்து ஹோமமும் நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அழகாக அலங்கரிக்கப்பட்டு காட்சி கொடுத்தனர். அப்போது பக்தர்கள் 'முருகருக்கு அரோகரா' என கோஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, திருமாங்கல்ய தாரணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வெகு விமரிசையாக நடைபெற்ற திருக் கல்யாண நிகழ்ச்சி

இந்த விழாவில் பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்துக்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச்சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் கல்யாண உற்சவத்தைத் தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

Intro:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு.Body:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி, நேற்று மாலை சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலகப்புகழ்  பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இன்று  குமரவிடங்க பெருமானும் ,தெய்வானை அம்பாளும்  மாலை மாற்றிடும் நிகழ்ச்சி, மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.  

அதனைத் தொடர்ந்து இன்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் தவசுக்கு புறப்பட்டு, தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, தவசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சுவாமியும் அம்பாளும் திருக்கோயில் வந்து சேர்ந்தனர். நள்ளிரவு 1.00 மணிக்கு கிழக்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கல்யாண நிகழ்வாக கும்பம் வைத்து ஹோமம் நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அழகாக அலங்காிக்கப்பட்டு காட்சி கொடுத்தனா். காப்பு கட்டும் நிகழ்ச்சியும்,மாலை மாற்றும் வைபவமும். புது வஸ்திரம் சாற்றும் நிகழ்வும் நடைபெற்றதை தொடர்ந்து குமரவிடங்கப்பெருமானுக்கு தெய்வானையை தாரைவார்த்துக்கொடுக்கும் வைபவமும் நடைபெற்றது. பக்தா்களின் அரோகரா முருகா கோஷங்களுடன் திருமாங்கல்யதாரணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு பன்னீா் தெளித்தல், நலுங்கிடல் வைபவம், கண்ணாடி காண்பித்தல், பாலும் பழமும் கொடுத்தல் மற்றும் மாப்பிள்ளை பெண் பொரியிடுதல் போன்ற கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக கோபுர ஆரத்தி,பஞ்ச தட்டு கற்பூரஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த விழாவில் பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்துக்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் கல்யாண உற்ச்சவத்தை  தரிசனம் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.