ETV Bharat / state

கொலை குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

தூத்துக்குடி: இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்
author img

By

Published : Sep 27, 2019, 8:38 PM IST

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் சரவணன் என்ற ஜிந்தா சரவணன். இவரது வீட்டிற்குள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த வடிவேல், தாளமுத்து நகரைச் சேர்ந்த முனியசாமி, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் விசாரணையில் கைதான மூன்று பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்பிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் மூன்றுபேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Intro:கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த வெள்ளைபாண்டி மகன் சரவணன் என்ற ஜிந்தா சரவணன் என்பவர் கடந்த 27.08.2019 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார், முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடி ஆரோக்கியபுரம், முத்துநகரைச் சேர்ந்த வடிவேல் (39), தாளமுத்து நகர், குமரன் நகரைச் சேர்ந்த முனியசாமி (39) மற்றும் பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த ஜான்சன் (43) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் வடிவேல் உள்பட 3பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
இதைதொடரந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, குற்ற வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் வடிவேல், முனியசாமி, ஜான்சன் ஆகிய 3 பேரையும் மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.