ETV Bharat / state

தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி! - Thoothukudi District accident News

தூத்துக்குடி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

author img

By

Published : Dec 19, 2022, 10:35 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பேருந்தும், சிவகாசி அருகே செவல்பட்டி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேரும் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவர்கள் செந்தில் குமார், அஜய், கீர்த்திக் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாணவர்கள் அருண்குமார், விக்னேஷ் பேருந்தில் பயணித்த கூலித்தொழிலாளி மாடசாமி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி மாறி காதல் திருமணம் - மருமகனை ஆணவப்படுகொலை செய்த மாமனார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.