ETV Bharat / state

எடப்பாடி மீது நடவடிக்கையா? - நியாயமான கேள்வி என்கிறார் கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து முடிவு எடுப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு
author img

By

Published : Oct 22, 2022, 4:57 PM IST

Updated : Oct 22, 2022, 5:09 PM IST

தூத்துக்குடி: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விரைவுப்படுத்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று (அக். 22) ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையின் போது தண்ணீர் தேங்குவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு

இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை?: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், "ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதலமைச்சர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்னும் சரியாக விசாரித்து விட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கேள்வி நியாயமான கேள்வி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்" என கூறினார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இஸ்ரோவின் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்எல்வி மாக்-3 இன்று நள்ளிரவில் விண்ணில் பாய்கிறது

Last Updated : Oct 22, 2022, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.