ETV Bharat / state

'தொடர் மழையால் ரூ.300 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு!' - வேதனையில் உற்பத்தியாளர்கள் - thoothukudi match box

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ரூ.300 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

match box
match box
author img

By

Published : Dec 5, 2019, 1:47 PM IST

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும், நெல்லை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும்; 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 80 விழுக்காடு பெண்களே பணிபுரிகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு மட்டுமின்றி, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தொழில் பாதிப்பு
தொழில் பாதிப்பு

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் ரூ.300 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வட மாநிலங்களில் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடக்கம், மின் கட்டணம், லாரி வாடகை உயர்வு ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி தயாரிக்கும் பணி
தீப்பெட்டி தயாரிக்கும் பணி

தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு பெய்து வரும் மழையால், கேரள மாநிலத்திலிருந்து தீக்குச்சிகள் தயாரிப்பிற்கான மரத்தடிகளின் வரத்து நின்றுவிட்டது. இருப்பில் இருக்கும் மரத்தடிகளும் மழையில் நனைந்துவிட்டன. இருப்பில் இருக்கும் குச்சிகளில் மருந்து முக்கி, காய வைக்கவும் போதுமான வெயில் இல்லை. மழை சீசன் என்பதால் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் மானாவாரி விவசாயப் பணிகளுக்கு சென்று விட்டனர். இதனால், தீப்பெட்டி உற்பத்தி முற்றிலுமாகப் பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் கடந்த ஒரு மாதமாக ஆலைகள் தொடர்ந்து இயங்கவில்லை.

தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் பெண் ஊழியர்கள்

இதனால், முழுவதும் ரூ.300 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள பண்டல்கள், பிற மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்ல முடியாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. மழையால், தீப்பெட்டித் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க: 'உற்பத்தி வரியைக் குறைக்காதது வேதனை' - கலங்கிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!

Intro:”தொடர் மழையால் ரூ.300 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு!”- வேதனையில் உற்பத்தியாளர்கள்
Body:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளதாக கவலையுடன் கூறுகிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல பகுதிகளிலும், நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 80 சதவீதமானோர் தொழிலாளர்கள் பெண்கள்தான். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், அரியானா போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையினால் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம், “தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு, மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, வட மாநிலங்களில் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் துவக்கம், மின்கட்டணம், லாரி வாடகை உயர்வு ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு பெய்து வரும் மழையால், கேரள மாநிலத்திலிருந்து தீக்குச்சிகள் தயாரிப்பிற்கான மரத்தடிகளின் வரத்து நின்றுவிட்டது. இருப்பில் இருக்கும் மரத்தடிகளும் மழையில் நனைந்து விட்டன. இருப்பில் இருக்கும் குச்சிகளில் மருந்து முக்கி, காய வைக்கவும் போதுமான வெயில் இல்லை. மழை சீசன் என்பதால் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் மானாவாரி விவசாயப் பணிகளுக்கு சென்று விட்டனர். இதனால், தீப்பெட்டி உற்பத்தி முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் கடந்த ஒரு மாதமாக ஆலைகள் தொடர்ந்து இயங்கவில்லை. இதனால், முழுவதும் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான பண்டல்கள், பிற மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்ல முடியாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. மழையால், தீப்பெட்டித் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.