ETV Bharat / state

நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 30, 2020, 12:59 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள 126 ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள 126 ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக்கோரியும் கடைகளை இழக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடைகள் கட்டிக் கொடுக்கக்கோரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

thoothukudi marxist communist party protest against encroachments
நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார், கட்சியின் நகரச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மவுனப் போராட்டம்' - பாஜக உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.