தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு காளி வேடம் அணியும் பக்தர்கள் கோயிலின் பத்தாம் திருவிழா நடைபெறும் நாளன்று தரிசனத்திற்கு தகுந்த இடைவெளியுடன் அனுமதி வழங்கக் கேட்டும் மேலும் உள்ளூரில் சப்பர பவனி அனுமதிம் கேட்டு மாவட்ட ஆட்சியகரத்திற்கு இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் நான்கு நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் எனக் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.