ETV Bharat / state

தூத்துக்குடி மளிகைக் கடையில் திருட்டு : மூவர் கைது

தூத்துக்குடி: மளிகைக் கடையில் பணம், சிகரெட் பண்டல்கள் திருடிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மளிகை கடையில் திருட்டு: மூவர் கைது

author img

By

Published : Apr 14, 2021, 4:27 PM IST

தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (44), அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்.12) இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் காலையில் அவர் வந்து கடையை திறக்கவந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கல்லா பெட்டியில் வைத்திருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் திருடு போயிருந்தன.

இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி ரஹமத்துல்லா புரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 19), கந்தசிவா (18), அவரது நண்பர் கன்னியாகுமரி மாவட்டம் மேட்டுகுடியிருப்பைச் சேர்ந்த மாரியப்பன் (19) ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த பணம், சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.