ETV Bharat / state

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்! - Thoothukudi Government Medical College Hospital

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
author img

By

Published : Aug 4, 2020, 7:28 PM IST

தூத்துக்குடியில் கரோனா தொற்றின் பாதிப்பானது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் அதிகமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில், சுகாதாரத் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறியதாவது, 'தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 7 ஆயிரத்து 800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு காய்ச்சல் பரிசோதனை மையத்தின் மூலமாக தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதிரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றது. மேலும் தினசரி 3 ஆயிரம் பேருடைய மாதிரிகளை, பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மாவட்டத்தில், 13 மாநகராட்சிப் பகுதி உட்பட மாவட்டத்தின் 48 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தொடர்ந்து பேசிய அவர், 'தூத்துக்குடியில் 5 தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை இம்மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனியாக 700 படுக்கைகள் உள்ளன. மேலும் கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகியப் பகுதிகளில் ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை தடுக்கவில்லை என்றால் குலக்கல்வியாக மாறும்: டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.