ETV Bharat / state

தாசில்தார் வீடு முன்பு மனைவி திடீர் தர்ணா.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - மனைவி தர்ணா

நீதிமன்ற உத்தரவின் படி தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் வீட்டின் முன்பு அவரது மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வீடு முன் மனைவி தர்ணா
கணவர் வீடு முன் மனைவி தர்ணா
author img

By

Published : Feb 9, 2023, 8:54 AM IST

கணவர் வீடு முன் மனைவி தர்ணா

தூத்துக்குடி: மடத்தூரை சேர்ந்த ஞானராஜ், தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கிரேசி விஜயா என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சிறிது காலத்திற்கு பிறகு திருமண பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கிரேசி விஜயாவின் இரண்டு குழந்தைகளையும் ஞானராஜ் அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கிரேசி விஜயா நீதித்துறை நடுவர் எண் 3 இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதன், இரண்டு குழந்தைகளையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி நீதிமன்றம் அழைத்து வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைச் செயல்படுத்துமாறு பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும் 6ம் தேதி வரை இரண்டு குழந்தைகளையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காலம் கடத்தி வந்துள்ளார் ஞானராஜ்.

இதனையடுத்து இரு குழந்தைகளையும் உடனடியாக மனுதாரர் கிரேசி விஜயாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு வட்டாட்சியர் ஞானராஜ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து அவரது மனைவி கிரேசி விஜயா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் காவலரிடம் அவதூறு வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.