தூத்துக்குடி கடல் பகுதியில், 100 கிலோ ஹெராயின் போதை பொருள், 5 துப்பாக்கிகளுடன் இலங்கை பதிவெண் கொண்ட படகு பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் படகிலிருந்த 6 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், குற்றவாளிகள் 6 பேரும் தூத்துக்குடி இரண்டாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி உமாதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனை பரிசோதனைக்கு பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரூ 500 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலுடன் தொடர்பு?