ETV Bharat / state

குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை..! - Thoothukudi Public hearing on drinking water connection

தூத்துக்குடி: புதிய குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் போரட்டம் தூத்துக்குடி குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் போரட்டம் குடிநீர் பிரச்சனை Public hearing on drinking water connection Thoothukudi Public hearing on drinking water connection Thoothukudi drinking water Issues
Public hearing on drinking water connection
author img

By

Published : Mar 6, 2020, 7:56 PM IST

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை காலத்திற்கு முன்பாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 51ஆவது வார்டுக்குட்பட்ட ஊரணி ஒத்தவீடு பகுதியில் 250-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அலுவலர்கள், முன் தொகையை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் போரட்டம் தூத்துக்குடி குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் போரட்டம் குடிநீர் பிரச்சனை Public hearing on drinking water connection Thoothukudi Public hearing on drinking water connection Thoothukudi drinking water Issues
ஆணையாளரிடம் பேசும் எம்.ஏல்.ஏ கீதாஜீவன்

இதுகுறித்து தகவலறிந்து நேரில் வந்த தூத்துக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊரணி ஒத்தவீடு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அலுவலர்கள் வைப்புத் தொகையை வசூலித்துள்ளனர்.

ஆனால் அப்பகுதியினருக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகை தேவையற்றது என ஆணையர் கூறினார். இதுதொடர்பாக அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இணைப்பு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

கரிகளம், மேட்டுப்பட்டி பகுதி மக்களுக்கு வழங்கப்படுவது போல் ஊரணி, ஒத்தவீடு பகுதி மக்களுக்கும் மாதாந்திர கட்டணம் அடிப்படையில் குறைந்தத் தொகையில் தேவையான குடிநீரை சீரான முறையில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.