ETV Bharat / state

வெடிமருந்து கிடங்குகளில் தூத்துக்குடி எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி: தேர்தலையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும்விதமாக வெடிமருந்து கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

SP inspection
SP inspection
author img

By

Published : Mar 2, 2021, 7:35 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், கயத்தாறு, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் கல்குவாரி, கிணறு வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துப் பொருள்கள் விற்பனைசெய்யும் கிடங்குகள் உள்ளன.

இந்தக் கிடங்குகளை இன்று (மார்ச் 2) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீரென ஆய்வுசெய்தார். தொடர்ந்து வெடிமருந்துக் கிடங்கில் பராமரித்துவரும் பதிவேடுகளையும் ஆய்வுசெய்தார்.

SP inspection
வெடிமருந்துக் கிடங்குகளில் ஆய்வு

அதன்பின் வெடிமருந்து பயன்படுத்தும் குவாரி உரிமையாளர்களிடம், வெடிமருந்து பொருள்கள் கல்குவாரி, கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வருவாய்த் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரகத் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜ், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்பட காவல் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.