ETV Bharat / state

5 கி.மீ தூரம் பைக்கில் பயணித்து விழிப்புணர்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்! - Thoothukudi district news

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், இருசக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டார்.

5 கி.மீ தூரம் பைக்கில் பயணித்து விழிப்புணர்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Dec 6, 2022, 12:36 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேரணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த பேரணியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி ஆர்டிஓ விநாயகம் ஆகியோர் ஆயுதப்படை வளாகத்தில் இருந்து முத்து நகர் கடற்கரை வரை, சுமார் 5 கிலோமீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், “தூத்துக்குடி மாவட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் சீட் பெல்ட், ஹெல்மட் அணிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் இன்று (டிச.6) காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை மூலம் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வை பறைசாற்றும் விதமாக இன்று இரு சக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 350 முதல் 390 வரை இறப்புகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 14,000 முதல் 15,000 வரை சாலை இறப்புகள் விகிதம் உள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு, வருவாய்த்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் சாலை விபத்து மரணம் கணிசமாக குறைக்கலாம்” என கூறினார்.

இதையும் படிங்க: Watch:அசுரவேகத்தில் சறுக்கிய பைக்! அசால்ட்டாக எஸ்கேப் ஆன இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.