ETV Bharat / state

லூர்து பிரான்சிஸ் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி - VAO சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்! - VAO lurthu francis

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அஞ்சலி செலுத்தினார்.

லூர்து பிரான்சிஸ் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி - VAO சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

author img

By

Published : Apr 26, 2023, 10:57 PM IST

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அஞ்சலி செலுத்தினார்

தூத்துக்குடி: முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ், நேற்று (ஏப்ரல் 25) அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும்போதே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர், அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி அருகே உள்ள சூசை பாண்டியபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின், இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே, இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ராஜன் சேதுபதி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் தண்டனை பெற்று தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க: VAO Murder: விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.