தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன்.23) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு, 34 திருநங்கைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார். இதுகுறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், “தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா நிவாரண உதவித் தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா நான்காயிரம் ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார்.
இதில் குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் அனைவரும் பயன்பெற்றார்கள். குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அவர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
![thoothukudi news thoothukudi latest news thoothukudi collector issue corona relief fund for transgender thoothukudi collector corona relief fund தூத்துக்குடி செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கரோனா நிவாரண நிதி கரோனா குடும்ப அட்டை இல்லா திருநங்கைகளுக்கு நிவாரண நிதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-transgender-corona-relief-fund-photo-script-7204870_23062021191945_2306f_1624456185_292.jpg)
அதனடிப்படையில் நேற்று (ஜூன்.23) கோவில்பட்டியில் 64 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 68 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் அரசின் உதவிகளைப் பெற்று அவைகளை முழுமையாகப் பயன்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் பாதரச ஆலை பிரச்சினை: விதிகளை மீறும் ஆலை நிர்வாகம்