விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செப். 5) மாலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது; கல்வி தொடர்பான அதிகாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தையும், உரிமைகளையும் கல்வி தளத்தில் பாதுகாக்கக் கூடிய வகையில் அது அமையும்.
எனவே ஒத்திசைவு பட்டியலிலிருந்து மாநில அரசுக்கான பட்டியலில் மாநில அரசுக்கான அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்று தொடங்கிய அவர், தமிழக அரசு இன்றைக்கு மாதிரி பள்ளிகள் என்று புது தில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அவர்களைக் கொண்டு திறந்து வைத்திருக்கிறது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு முயற்சி, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மிக சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லுவது தடுக்கப்படவேண்டும். அரசு பள்ளிகளில் படித்தால் நல்லது என்கிற உணர்வு பெறக்கூடிய வகையிலே பள்ளிகளின் கட்டமைப்பு ஆசிரியர்களின் திறன் மேம்பாடு அமைய வேண்டும். அதற்கான ஒரு முயற்சியாக இன்றைக்கு முதல்வர் மாதிரி பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார். அதனை திறந்தும் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி, அது மேலும் பரவலாக கட்டமைக்கப்பட வேண்டும்.
டிஇடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஏராளமான பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். பள்ளி, ஆசிரியர் நியமனங்களில் டிஇடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கிறோம். டிஆர்பி தேர்வில் இப்போது முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதில் சில மாணவர்கள் தமிழ் வழியில் பயின்ற நிலையிலும், சான்றுகளை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் தங்களுடைய பெயர் தகுதி பட்டியலில் அல்லது தேர்ச்சி பட்டியலில் இடம்பெறவில்லை என்று முறையூட்டு இருக்கிறார் அதனை அரசு அங்கீகரிக்க வகையில் அவ்வாறு விடுபட்டு போன அல்லது தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் அதை முறையாக சமர்ப்பிக்க இயலாத நிலையை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடிய வகையில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான ஒரு நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாடு அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சுப்பிரமணிய சுவாமி அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சோசலிசம், மற்றும் செக்யூலரிஸம் என்ற இரண்டு சொற்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம், நடைமுறையில் இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவது என்பது தான். அதற்கு ஒரு சான்றுதான் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அமைந்துள்ளது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையுடு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து தாக்கல் செய்ய இருக்கிறோம். அந்த வழக்கை சுப்ரமணியசாமி திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல உத்திரப் பிரதேசத்தில் 30 சாமியார்கள் ஒன்றுகூடி 700 பக்கத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை எழுதி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி 30 பக்கம் மட்டும் அந்த அரசியலைமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், அப்படி வந்தால் இந்தியாவின் தலைநகரம் உறுதியாக இருக்காது வாரணாசி தான், இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் ஜனநாயக முறைப்படி இருக்காது.
வர்ணாசிரம முறை படி இருக்கும் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டு போட உரிமை மறுக்கப்படும் என்றெல்லாம் அவர்கள் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கை, அவ்வாறு வெளியிட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும். அது நாட்டில் பதற்றத்தை உருவாக்கிட ஒரு முயற்சி, ஆகவே அந்த முயற்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பரந்தூர் விமான நிலையம் கோரிக்கை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அங்கு ஏராளமான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது ஆகவே குடிமக்களின் பட்டா, இடம் மற்றும் விலை நிலம் ஆகியவற்றை கையகப்படுத்த முயற்சிக்காமல் வீடுகளை இடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்திலேயே தேவையான நிலங்களை கையகப்படுத்தும் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
எட்டு வழி சாலை திட்டம் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது எட்டு வழிசாலை கூடாது என்பதுதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் கோரிக்கை, அமைப்புகளின் கோரிக்கை ஆகவே அது நடைமுறைக்கு வராது. இலங்கையில் எவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் என்பது மட்டும் தொடர்கதையாக நீடித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களின் காலங்களில் இந்திய அரசு எப்போதும் கவனம் செலுத்துவதில்லை, யார் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலைமை தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்தாலும் கூட மத்திய அரசு இந்தியர்களை அரசு வழக்கம் போல சிங்கள ஆட்சியாளர்களுக்கு துணை போகிற நிலை தான் உள்ளது. அதனால் அடுத்தடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படும் அவலம் தொடர்கிறது.
இந்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கைப்பற்றப்பட்டு இருக்கிற அனைத்து உடைமைகளையும் திரும்ப பெறுவதற்கு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர், சட்டம், ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சிக்கு எதிராக முன்வைக்கிறார்கள்.
குற்றச்சாட்டுகளை அவதூறு மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் என்பது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கக்கூடிய பாராட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது என்பது அனைத்து தரப்பு மக்களும் அறிந்த உண்மையாகும்.
இந்திய ஒற்றுமை என்பது பாரதிய ஜனதா கட்சியின் சூழ்ச்சிகளை முறியடித்து அதற்கான ஒரு செயல்திட்டம், அவர்கள் இந்தியர்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும், பிளவு படுத்துகிறார்கள் இந்துக்களை மேல்சாதி கீழ்சாதி என்று பிளவு படுத்துகிறார்கள். பிரிவினை வாதம் பாரதிய ஜனதாவின் அரசியல் நிலைப்பாடாக இருக்கிறது அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது என்கிற மிகவும் ஆபத்தான அரசியலை பாரதிய ஜனதா கையிலெடுத்திருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய அளவில் இத்தகைய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருப்பது பாராட்டுதலுக்குரியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகிறோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு என்பதற்கு வாய்ப்பே இல்லை, அப்படி சிறக்க மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு தரப்பினர் யார் என்று தெரியவில்லை பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலை தரப்புக்கு ஒருபோதும் இடம் தரமாட்டார்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!' - அரவிந்த் கெஜ்ரிவால்