தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் முதல் 15 நாளுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினரும், கோயில் பணியாளர்களும் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். அதில் ரூ.2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரத்து 642 கிடைத்துள்ளது. அத்துடன் 1 கிலோ 900 கிராம் தங்கமும், 18 கிலோ 200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் வெளிநாட்டு பணமும் அடக்கம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை