தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே நகராட்சி 3ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவரின் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
அந்த ஆடியோவில், ”இது நிர்வாக சீர்கேடா, இல்ல கடவுளோட சோதனையா, இல்ல திமுக கவுன்சிலர்களாகிய நாங்க வந்த தரித்திரமா என்று தெரியவில்லை. அனைத்து பொதுமக்களும் குடிநீர் கிடைக்கவில்லை என்று திட்ட ஆரம்ப்பிச்சிட்டாங்க, ஆனால் குடிநீர் கொடுக்கவும் முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
புது நகராட்சி கட்டடம், புது மார்க்கெட் கட்டடம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுங்க எனவும் இல்லையென்றால் ஒரு நாள் நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும் என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: "கேரள முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்