ETV Bharat / state

அக்னிபாத் திட்டத்தில் சேர பல லட்ச இளைஞர்கள் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

author img

By

Published : Aug 12, 2022, 11:08 PM IST

பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அக்னி பாத் திட்டத்தில் சேரத் தயாராகயிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்

அக்னி பாதை திட்டத்தில் சேர பல லட்ச இளைஞர்கள் தயாராக உள்ளனர் எல் முருகன்

தூத்துக்குடி: பாரதியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசுகையில், ”75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணற்ற தியாகிகளை போற்றும் விதமாகவும், நமது தேசியக்கொடியின் அருமை மற்றும் புகழை, பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் அஸ்ஸாம் வரை என அனைத்துப்பகுதிகளிலும் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட 75 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டதில் தூத்துக்குடி மாவட்டமும் உண்டு. அது நமக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியதாக உள்ளது. வெள்ளையனை விரட்டிய வீரம் தழுவிய பூமி நம்முடைய தூத்துக்குடி. தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைக்கொண்டு வந்துள்ளது மத்திய அரசு, ஒவ்வொரு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றி மக்கள் உள்ளம் தோறும், தேசிய சிந்தனையை மேலும் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள், சகோதரிகள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக ’அக்னி பாத்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அக்னி பாத் திட்டத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர்” என்றார்.

அக்னிபாத் திட்டத்தில் சேர பல லட்ச இளைஞர்கள் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

இதையும் படிங்க: தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.