டிஎன்பிஎல் கிரிக்கெட் டி20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் தூத்துகுடி டூடி பேட்ரியட்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. அப்போது மழைபெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது. அதன்பின் இரு அணிகளுக்கும், தலா 13 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டன.
முதலில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்பின் ஆடிய டூட்டி பேட்ரியட்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஸ்ரீனிவாசன் 11 பந்துகளில் 31 ரன்களும், சுப்ரமணிய சிவா 21 பந்துகளில் 44 ரன்களும் விளாசினர்.
நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. கோவை அணி சார்பில் அந்தோனி தாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.